×

கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஜிகே வாசனுக்கு அதிகாரம்: சென்னையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமாகா மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று காலை நடந்தது. இதற்கு கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மூத்த துணை  தலைவர் ஞானசேகரன், கோவை தங்கம், கத்திபாரா ஜனார்த்தனன், தலைமை நிலைய செயலாளர் ஜிஆர் வெங்கடேஜ், என்டி சார்லஸ், ஜேஎஸ்கே சதீஸ்குமார், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன்,  விஜி தாக்கோ உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உச்சநீதிமன்றம், காவிரி ஆணையம் கர்நாடகா மேகதாது அணை கட்டும் பணிகளை செய்யக்கூடாது, தீர்ப்புக்கு மீறி  அணை கட்டும் விஷயமாகவோ, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. அதை மீறி, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை கண்டிக்கிறோம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த அனைவருக்கும் முன்னுரியை அடிப்படையில் வீடு வழங்க வேண்டும். பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு  தமிழக மக்களின் மிகுந்த மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கை மாநில அரசு தீவிரமாக தொடர வேண்டும். 2019ம்  ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற ேதர்லில் தாமக நலனை கருத்தில் கொண்டு, ேதர்தல் கூட்டணி அமைப்பதற்கான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜிகே வாசனுக்கு ஏகமனதாக வழங்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jake Swan ,coalition ,meeting ,Chennai , Coalition, Jake Vasan, Chennai, Meeting, Resolution
× RELATED வாக்கு சதவீதத்தில் குளறுபடி,...